தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 31 மாவட்டங்களில் உள்ள 113 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தில் 3207 வது கோயிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை இசக்கி அம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேந்தாரண்யேசுவர சாமி கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில், தென்காசி மாவட்டம் கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சின்னமலை யோக ஆஞ்சநேய சுவாமி கோவில் உட்பட 113 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்த சமய அறநிலையத்துறை செய்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.