
தமிழ் சினிமாவில் காமெடியராக மட்டுமின்றி நடிகராகவும் வளம் வருபவர் யோகி பாபு. இவர் ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு, பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் யோகி பாபு நடித்த, ‘போட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ‘மண்ணாங்கட்டி’, வானவன் மற்றும் ‘ஜோரா கையை தட்டுங்கள்’ போன்ற பல படங்களையும் அவர் தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு, ட்ராப் சிட்டி என்ற படத்தின் மூலம் முதல் முதலில் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தை திருச்சியை சேர்ந்த இயக்குனர் டெல்.கே.கணேசன் இயக்கியுள்ளார். இதில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ட்ராப் சிட்டி’ படத்தில் நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் ஹாலிவுட் சினிமாவில் இயக்குனர் அறிமுகப்படுத்த உள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.