மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்துள்ளனர். அடல் பென்ஷன் மேலாண்மையின் கீழ் அதன் சொத்து மதிப்பு 27,200 கோடியாக இருக்கிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம் பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் அதன் இலக்கை எட்டியுள்ளது. அதன்படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளையில் 100-க்கும் மேற்பட்ட அடல் பென்சன் யோஜனா திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பிராந்திய ஊரக வங்கிகளில் 32 வங்கிகள் அதன் இலக்கை எட்டியுள்ளது. மேலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.