பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகர் அசீம் டைட்டில் வென்ற நிலையில், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், சிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். ஆனால் அசீம் டைட்டில் ஜெயித்தது தவறான விஷயம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதன் பிறகு விக்ரமன் தான் டைட்டில் வெல்ல வேண்டும் என்று பலரும் விருப்பப்பட்ட நிலையில், அசீம் ஜெயித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்ரமன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மக்கள் தீர்ப்பிற்கும் இந்த ரிசல்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் செல்போன் இருக்க வேண்டும். அதில் ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்.

ஆனால் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம் எளிய மக்கள். அவர்களிடம் செல்போன் கூட கிடையாது. அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி எனக்கு வாக்களிக்க முடியும். எனவே மக்கள் ஆதரவுக்கும் இந்த தீர்ப்புக்கும் சம்பந்தமே இல்லை. அசீம் ஜெயித்தால் இந்த சமூகத்துக்கு தவறான பிரதிபலிப்பாகி விடும் என்று நினைத்தேன். அது ஆபத்து என்று நினைத்தேன். அடாவடியாக விளையாடினால்தான் டைட்டில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என்று பயந்தேன். ஆனால் அதுதான் தற்போது நடந்திருக்கிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி மற்றும் பரிசு உண்மை கிடையாது என்பதை நீங்களும் நானும் நம்ப வேண்டும். பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட அதைத்தான் நம்புகிறார்கள். மேலும் அதனால் தான் மக்கள் என்னை இப்போது கொண்டாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.