2023 ஆசியக் கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

2023 ஆசிய கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி, ஒருநாள் போட்டியில் தனது 2வது குறைந்த ஸ்கோரைப் பெற்று 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள்  6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் இந்திய அணியின் வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்தார்.

இந்த ஆசிய கோப்பை தொடரை பற்றி பேசினால்,  அதிக விக்கெட் வீழ்த்திய வீரரில் இலங்கையின் மதிஷா பத்திரனா 11 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். அதேசமயம், முகமது சிராஜ் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆனார். குல்தீப் யாதவ் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தவிர, பேட்டிங்கில், ஷுப்மன் கில் 302 ரன்கள் எடுத்து போட்டியின் அதிகபட்ச ஸ்கோரராக ஆனார். எந்த விருதை யார் பெற்றார் என்பதை  தெரிந்து கொள்வோம்..

யாருக்கு எந்த விருது கிடைத்தது?

போட்டியின் ஸ்மார்ட் கேட்ச் – ரவீந்திர ஜடேஜா (3000 அமெரிக்க டாலர்கள் தோராயமாக 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்)

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் – முகமது சிராஜ் (5000 அமெரிக்க டாலர்கள் தோராயமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்)

போட்டியின் சிறந்த வீரர்- குல்தீப் யாதவ் (15000 அமெரிக்க டாலர்கள் தோராயமாக 12 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்)

இலங்கை கிரிக்கெட் மைதான பணியாளர் விருது (50000 அமெரிக்க டாலர்கள் தோராயமாக 41 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்)

இதில் முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதையும், பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைத்தது?

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனால் போட்டியில் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக 1 கோடியே 24 லட்சத்து 63 ஆயிரம் பரிசுத் தொகை கிடைத்தது.. அதேசமயம் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணிக்கு 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் ரூ.62.31 லட்சம் கிடைத்தது.