ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 4 வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை..

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை 2023க்கான இந்திய கிரிக்கெட் அணியை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்று அறிவித்தனர். இந்த அணியில் 17 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல புதிய மற்றும் பல பழைய வீரர்கள் ஆசிய கோப்பைக்கான அணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படாத பல வீரர்கள் இருந்தனர். 

இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் சில முக்கிய வீரரர்களின் பெயரை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பிடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.. இந்நிலையில் அணியில் இடம்கிடைக்காத அப்படிப்பட்ட 4 வீரர்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். 

1. யுஸ்வேந்திர சாஹல் :

ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டுள்ளார். சாஹலின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் 72 போட்டிகளில் மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சாஹலின் சராசரி 27, அவரது எக்கனாமி 5.26 மட்டுமே. ஆனால் மீண்டும் ஒரு பெரிய போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2. ரவிச்சந்திரன் அஸ்வின் :

சாஹலைப் போலவே, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினும் இந்திய அணியில் இருந்து வெளியேற வழி காட்டப்பட்டுள்ளார். அஸ்வினுக்கு பதிலாக அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இரு வீரர்களும் அசத்துகிறார்கள். இதனால்தான் 17 பேர் கொண்ட அணியில் கூட அஷ்வினுக்கு இடம் கிடைக்காமல் போனது. அஸ்வின் 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3. ஷிகர் தவான் : 

இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரும், ஐசிசி போட்டிகளின் நாயகனாகவும் கருதப்படும் ஷிகர் தவானும் அணியில் இடம் பெறவில்லை. கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் தவான் எந்த வடிவத்திலும் இடம்பிடிக்கவில்லை. தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் 167 போட்டிகளில் 17 சதங்களின் உதவியுடன் 6793 ரன்கள் எடுத்துள்ளார்.  

4. வாஷிங்டன் சுந்தர் :

நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சுந்தர் சமீபத்தில் உடல்நிலைக்குத் திரும்பினார். ஆனால் அணியில் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுந்தரால்  இடத்தைக் கூட அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்த வீரர் தனது 16 ஒருநாள் போட்டிகளில் 233 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் பந்து வீச்சில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (து.கே), விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்)