ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது..

ஆசிய கோப்பை போட்டி இம்மாதம் 30ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இன்னும் ஒன்றரை மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பையும் தொடங்க உள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியே ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் ஆசிய கோப்பைக்கான தங்கள் அணிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா 17 பேர் கொண்ட அணியையும் இன்று அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி :

ரோகித் சர்மா (கே), விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இசான் கிஷன், ஹர்திக் பாண்டியா (து.கே), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் மூலம் ஒரு நாள் போட்டியில் திலக் வர்மா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து மீண்ட ராகுல், ஷ்ரேயஸ்  அணிக்கு திரும்பினர். ஸ்டாண்ட் பை வீரராக சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..