தமிழகத்தின் பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டதன் காரணமாக அவருக்கு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்காக 500 கோடி ரூபாய் அபராதம் தர வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார். இதேபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து எம்பி கனிமொழி அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அண்ணாமலை எந்தவித ரியாக்ஷனும் தராமல் இருந்த நிலையில் தற்போது திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சி. பால்கனராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆருத்ரா மோசடி வழக்கில் 84 கோடி பணம் பெற்றனர் என்று ஏப்ரல் 14-ம் தேதி கூறினார்.

இதில் அண்ணாமலைக்கு யார் பணம் கொடுத்தது என்ற விவரத்தை ஆர்.எஸ் பாரதி கூறவில்லை. மோசடி வழக்கில் பணம் பெற்றதாக கூறப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்யானவை. எனவே இது தொடர்பாக நீங்கள் கூறிய கருத்துகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்ட தவறினால் 500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ் பாரதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.