
கேப்டன் மில்லர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ரகுபதி. இவர் நடிகை ஆவதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராகவும், சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ரகுபதி வெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீர் குடிக்கும் படி ஆலோசனை கூறினார்.
அதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர் வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என எங்களிடம் சொன்னீர்கள், அதே மாதிரி நீங்கள் அணிந்திருக்கும் உடையும் வெயிலுக்கான ஒரு உடை என்று நான் நினைக்கிறேன் என சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா நாம இங்க என்ன டாபிக் பேசிகிட்டு இருக்கோம் ஏன் உடை பற்றி கேள்வி இங்கு சம்பந்தமில்லாமல் என பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இன்றைய முற்போக்கான காலகட்டத்தில் கூட அதிலும் குறிப்பாக ஊடகங்களில் உள்ளவர்களிடமிருந்து ஒரு பெண் வெறுப்பு மற்றும் அவமரியாதையை பெறுவது தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் கூட ஆண்களின் திமிர் மற்றும் ஈகோ தொடர்ந்து கொண்டே இருக்கிறது என குறிப்பிட்ட அவர் ஆண்களின் ஈகோ இன்றளவும் பெண்களுக்கு எதிராக நீடிப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விஷயம். நான் அந்த மேடையின் கண்ணியத்தை பாதுகாக்க கோபத்தில் எதுவும் கூறாமல் மௌனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன்.
ஆனால் அச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நான் அழுதேன், என்னை நான் ஆறுதல் படுத்திக் கொண்டேன். மீண்டும் எனது வேலையை தொடர ஆரம்பித்தேன்” என வெளிப்படையாக பதிவிட்டிருந்தார்.