டெல்லியின் சகார்பூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஒரு மாணவியை ரகசிய கேமராவில் பதிவு செய்த வீட்டு உரிமையாளர் மகன் கரன் (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இந்த மாணவி, ஊருக்கு செல்லும் போதெல்லாம் வீட்டின் சாவியை வீட்டு உரிமையாளர் மகன் கரனிடம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கரன் மாணவியின் அறை குளியலறை மற்றும் படுக்கை அறையில் உள்ள பல்பு ஹோல்டரில் ரகசிய கேமராவை பொருத்தி பல நாட்களாக அவரை கண்காணித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் வெளியில் வந்ததும், அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கரனின் குற்றம் நிரூபணமாகி அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.