குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் என்ற போட்டியில் கலந்து கொண்ட இவர் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆசிய சேம்பியன்ஷிப் போட்டி, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல்ட் காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற தகுதி இருந்தும் அவருக்கு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த விருதை தன்வசம் படுத்தினார். ஓய்வு அறிவித்துள்ள குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் பயிற்சியாளராக செயல்பட போவதாக கூறியுள்ளார்.