இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் யுபிஐ பேமென்ட் வழிமுறையை பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வர அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ பேமென்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு பணம் செலுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த யூபிஐ பேமென்டில் சர்வர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்பு கோளாறு காரணமாக பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதை எப்படி சரி செய்வது என்பதை குறித்து காணலாம்.

புகார்களை சரி செய்ய முதலில் யுபிஐ பிரிவின் கீழ் உள்ள Dispute Redressal Mechanism என்பதை கிளிக் செய்து கம்ப்ளைன்ட் பிரிவின் கீழ் transaction என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் Nature of the transaction என்ன என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் Transaction failed but amount debited என்பதை select செய்த பிறகு யுபிஐ பிரச்சனையின் சுருக்கமான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அதன் பின் பரிவர்த்தனை ஐடி, வங்கியின் பெயர், upi தொகை, பரிவர்த்தனை தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் யுபிஐ பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.