திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், ஆரிய மாடல் என்பது நீட் திணிப்பு மாடல். திராவிட மாடல் என்பது நீட்டுக்கு எதிர்ப்பான மாடல். ஆரிய மாடல் என்பது சமூக நீதிக்கு எதிரான மாடல்.திராவிட மாடல் சமூக நீதியை வெற்றி பெற வைத்த மாடல். ஆரிய மாடல் இந்தி திணிப்பு மாடல்.  திராவிட மாடல் மொழியை பாதுகாக்கின்ற மாடல். ஆரிய மாடல் மாநில உரிமைகளுக்கு எதிரான மாடல். திராவிட மாடல் மாநில சுயாட்சிக்கான மாடல். அப்போ அந்த திராவிட மாடல் உரிமைகளுக்காக நடத்துகின்ற போராட்டம் தான் இந்த போராட்டம்.

எங்க திராவிட மாடல் முதல்வர், கழகத் தலைவர்,  அவர் பொருளாளர் ஆகி,  செயல் தலைவராகும் போதும் திமுக பொதுக்குழுவில் போட்ட தீர்மானம்,  நீட் விலக்கு தீர்மானம். அவர் செயல் தலைவர் ஆகி,  தலைவராக கழகத்தின் பொறுப்பு ஏற்கும் போது போட்ட தீர்மானம் நீட் விலக்கு தீர்மானம். அவர் தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்ற பின்பு   திமுக பொதுக்குழுவில் போட்ட தீர்மானம்  நீட் விலக்கு தீர்மானம். அப்புறம் எங்கள பார்த்து கேக்குறீங்களே திமுக அரசியல் பண்ணதுன்னு சொல்றீங்களே…

திமுக இல்லை என்றால் ? நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் எழாது. திமுக ஆதரவு சக்திகளும், திமுகவும் களம் அமைக்கிறதால தான் தமிழ்நாட்டில் நீட் விலக்கு குரல் இருந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான்  பதறாங்க… சொல்றாங்க… திமுக நீட்டுக்காக என்ன பண்ணுச்சு என்று கேட்கிறார்கள் ? நான் திருப்பி கேட்கிறேன்..  கூட்டணி கட்சிகள் அப்படின்னு சொல்றனே…  கூட்டணி கட்சி தர்மங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா ? கூட்டணி கட்சி உடைய நோக்கம் என்ன ?

ஒன்றிய அரசுல…  மத்தியில இருக்கிற ஒரு தேசிய கட்சி கூட்டணியில் மாநில கட்சி இருந்துச்சுன்னா…  மாநில கட்சியின் உரிமைகள் பறிக்கப்படும் போது அந்த தேசிய கட்சியிடம் பேசி சண்டை செய்து,  மாநில உரிமையை பாதுகாப்பது தான் கூட்டணி கட்சியின்  தர்மம். அந்த தர்மத்தை காப்பாற்றியவர் முத்தமிழ் கலைஞர் என பேசினார். என தெரிவித்தார்.