நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையின் படி சத்துணவு மைய சமயலர் மற்றும் உதவியாளருடன் முன் விரோதம் இருந்ததால் சத்துணவு மைய கதவில் மனிதக் கழிவை பூசியதாக தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்