தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட 9995 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இன்று முதல் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.