
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 4 நாளை கடைசி நாளாகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், இந்தியாவில் உள்ள ராணுவ படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் காலியாக உள்ள 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படித்தவர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.