கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட 55 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திறன் தேர்வு, துறைவாரியாக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு விருப்பமுள்ள 30 வயதிற்கு உட்பட்டவர்கள் www.igcar.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.