இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவினை மும்பையில் நடத்துகிறது. இந்த விழாவானது கடந்த 27-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுடன் (31) நிறைவடைகிறது. இந்த விழாவின் தொடக்க திரைப்படமாக முந்தானை முடிச்சி  என்ற படத்தின் மூலம் பிரபலமான ஊர்வசியின் ‘அப்பத்தா ‘ படம்  திரையிடப்பட்டது. இதில் ஊர்வசி மகன்களால் கைவிடப்பட்ட அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 700- வது திரைப்படமாக உள்ளது.

விழாவில் இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளதாவது, “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும்  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காணும் ஆவல் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700-வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இந்த படம் எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்” என்று கூறியுள்ளார்.