குடியரசு தின விழா அன்று ஒவ்வொரு ஆண்டும் “வீர தீர செயல்களுக்கான அண்ணா விருது”முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளது. வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்தப் பதக்கம் பொதுமக்களில் மூன்று நபருக்கும், அரசு ஊழியர்களில்(சீருடைப் பணியாளர் உட்பட) மூன்று நபருக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த பதக்கத்தை பெற விண்ணப்பிப்பதற்கான முறைகள் பின்வருமாறு,
1. இந்தப் பதக்கம் பெற வயது வரம்பு எதுவுமில்லை.
2. 26.01.2025 அன்று முதலமைச்சரால் வழங்கப்படும்.
3. இந்த வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
4. இந்த இணையதள பக்கத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான தகுதிகள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும் (800 வார்த்தைகளுக்கு மிகாமல்) தெளிவான தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பி இப்படிவத்தை உறுதி செய்ய வேண்டும்.
5. இந்த விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 15.04 2024 ஆகும்.
6. கடைசி தேதிக்குப்பின் கோரப்படும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
7. அரசால் பரிந்துரைக்கப்பட்ட குழுக்கள் மூலமே இந்த விருதிற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.