சிரியாவில் ஒரு பரந்த நிலப்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகமானது ரிட்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டின் நேரப்படி அதிகாலை சுமார் 4.17 மணிக்கு காஜியாண்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் துருக்கி சிரியா எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5000 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துருக்கியின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நிலையில் துருக்கியில் 2200 ஆண்டுகளுக்கு பழமையான துருக்கியின் காஜியான்டெப் கோட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. பைசன்டைன்கள் மற்றும் ரோமானியர்கள் பயன்படுத்திய பழமையான கோட்டை இந்த பூகம்பத்தில் சுக்கு நூறானது. இந்த கோட்டை இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமானிய காலத்தில் கட்டப்பட்ட ஒரு காவல் கோபுரம் ஆகும்.