
உலக அளவில் கடந்த 2024ம் ஆண்டு தங்கம் அதிகளவில் வாங்கிய நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியதாவது, கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் பேங்க் 73 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டின் உள்ள தங்கத்தின் கையிருப்பில் 876 டன்களாக உயர்ந்துள்ளது. தங்கம் அதிக வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் போலந்து உள்ளது. இந்நாடு மொத்தம் 90 டன் தங்கம் வாங்கியுள்ளது. அடுத்த அடுத்த இடத்தில் உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், சீனா, ஜோர்டான், துருக்கி ஆகிய இடங்கள் உள்ளது.