ஆசிய சாம்பியன் டிராபி போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடும் நிலையில் கடந்த 14-ம் தேதி  நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது. இதற்கு முன் நடைபெற்ற 4 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அன்றைய தினம்  நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்தியாவிடம் சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய அணிகள் தோல்வியை தழுவிய நிலையில் பாகிஸ்தான் அணியும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று அரை இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தென் கொரியா அணியுடன் இந்திய அணி மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் 4-1 என்ற கோல் கணக்கில் சுலபமாக தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் அதிகபட்சமாக 2 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் இன்று அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவுடன் மோத உள்ளது.