
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் கட்சி வேறுபாடுகளை களைந்து ஒரே குரலாக தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்ததோடு தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்திற்கும் தங்களது ஆதரவை அளித்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது. மாநிலங்களை ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.