இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் என்று SBI வங்கி சார்பாக அறிவித்துள்ளது.

அப்படி செய்யா விட்டால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் நேரத்தில் அந்தப் பணம் யாருக்கும் பயன்படாமல் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். Nominee பெயர்களை சேர்க்க SBI 3 வழிகளை வழங்குகிறது. நெட் பேங்கிங் மூலம் செய்யலாம், YONO அப்ளிகேஷன் மூலம், அல்லது நேரடியாக வங்கியில் போய் செய்யலாம்.