உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இது தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் நிலையில் ஏராளமானோர் whatsapp செயலியை பயன்படுத்துவதால் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அதோடு நாளுக்கு நாள் மோசடிகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் whatsapp செயலியில் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமாக மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் தற்போது whatsapp செயலியில் திருமண அழைப்பிதழ் அனுப்புவது போன்று மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது திருமண பத்திரிகை போன்று ஒரு பிடிஎஃப் ஃபைல் அனுப்புகிறார்கள். இதனை பத்திரிக்கை என்று நம்பி திறக்கும்போது APK FILE டவுன்லோட் ஆகிறது. இதனால் உங்கள் மொபைல் நம்பரின் ஆக்சஸ் மோசடிக்காரர்களுக்கு தெரிந்து விடும். இதனால் உங்கள் போன் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. எனவே தெரியாத நம்பர்களில் இருந்து வரும் திருமண அழைப்பிதழ் pdf பைல்களை ஓபன் செய்யக்கூடாது. மேலும் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் என்பது பல்வேறு விதமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இதிலிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.