
தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் தற்போது சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழ்நாட்டிற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களில் மட்டும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு செல்போன்கள் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
அதன்படி பெஞ்சல் புயல் மணிக்கு 70 முதல் 90 km வேகத்துடன் பலத்த சூறைக்காற்று வீசி கரையை கடக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நாளை பிற்பகலில் வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதால் அத்தியாவசியமான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.