தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ம் தேதி முதல் 29ஆம் தேதி நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சமடையும். அனல் காற்று வீசும் என கூறப்படுகிறது. அக்னிக்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.