இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது திடீரென்று விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனால் அவசரமாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான பணிப்பெண் விமானத்தின் கதவை திறக்க முயன்றது யார் என்று பார்க்கையில் மும்பையை சேர்ந்த வருண் பாரத் என்ற நபர் என தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்துகையில் தெரியாமல் கதவை திறக்கும் பட்டனை அழுத்தி விட்டேன் என்று அவர் கூறினார்.

ஆனால் விமானி  இதனை ஏற்றுக் கொள்ளாமல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வருண் பாரத்தை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வால் மும்பை செல்ல வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.