செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதிமுகவில் இருக்கக்கூடிய சில தலைவர்களுக்கும்,  அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கலாம்,  அது எனக்கு தெரியாது. ஏனென்றால் அவங்களோட பேச்சை வச்சு சொல்றேன்.

எனக்கு யார்கிட்டயும் பிரச்சனை இல்லை. மத்தியில பிரதமராக மோடி அவர்களும்,  மாநிலத்தில் எடப்பாடி அவர்களையும் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கணும்னு….  இதை நான் எப்படி அறிவிப்பேன், எனக்கு தெரியாது. தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்வதற்காக நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவாய் இருக்கிறேன்.

தன்மானம் முக்கியம்…  அதன் பின்பு தான் அரசியல். செல்லூர் ராஜா அண்ணன் கேட்கிற கேள்விக்கு..  நான் எப்படி பதில் சொல்ல முடியும் ?  நான் பதில் சொல்ல முடியாது. அது தேசிய தலைமையும், தேசிய தலைவரும் சொல்லணும். சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா….  எல்லா கட்சிகளும் வேறு, வேறு. எல்லா கட்சியும் ஒரே கட்சி கிடையாது.

எல்லாம் வேறு வேறு. நேச்சுரலா ஒரு முட்டல் மோதல் வருவது,  சகஜம் தான். அது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஐடியாலஜிக்கலி வேற. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972இல் உருவான சரித்திரம் வேற. பாரதிய ஜன சங்கம் 1950 காலகட்டத்தில் உருவான கருத்து வேற என தெரிவித்தார்.