
AI மூலமாக ஒருவரின் குரலை அவருக்குத் தெரியாமல் மாதிரி எடுத்து அவருடன் தொடர்புடையவரிடம் மர்ம நபர்கள் பேசி நிதி மோசடி மற்றும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க AI Call Scanner வசதியை முதல் முறையாக அமெரிக்காவில் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் Truecaller அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது செல்போனுக்கு வரும் அழைப்பை கிரகித்து அது உண்மையான குரலா இல்லை AI குரலா என திரையில் காண்பிக்கும்.