
லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஐ.தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி 2.0 உள்ளிட்ட பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
View this post on Instagram
ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர் எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது. இதன் காரணமாக அவர் சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இதை தொடர்ந்து எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மகனைப் பிரிந்து முதல் முறையாக வேலைக்கு செல்வது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எப்போ வீடு திரும்பி மகனை பார்க்க போறோம்னு ஏக்கமாக உள்ளது. இந்த பிரிவு, கஷ்டம் எல்லாமே மகனுக்காக தான் என்பதை நினைக்கும் போது சற்று ஆறுதலாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.