தமிழ் சினிமாவில் 90’களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவர் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை விக்ரமன் இயக்க, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நடிகர் சரத்குமார் தந்தை மகன் என இரு வேடத்தில் நடித்து சூர்யவம்சம் படத்தில் அசத்தி இருப்பார். ஆர்.பி சவுத்ரி தயாரித்த சூரிய வம்சம் படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியின் போது சூரிய வம்சம் பார்ட் 2 வெளிவரும் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். மேலும் சூரிய வம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என நடிகர் சரத்குமார் சொன்னது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.