ஆப்கானில் தற்போது பொருளாதார பிரச்சினை காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் தற்போது ஆப்கானிஸ்தானும் சேர்ந்துள்ளது. அங்கு வசிக்கும் 90 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் பசியில் வாடுகின்றனர். ஏற்கனவே அந்நாட்டில் தளிப்பான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதோடு அவர்கள் வெளியில் சென்று பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே பொருளாதார சிக்கலில் சிக்கிய ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்க்கிறது. இந்நிலையில் அந்நாட்டு நிலையை உணர்ந்த இந்தியா 10000 மெட்ரிக் டன் கோதுமையை சமீபத்தில் வழங்கி உதவியுள்ளது. இதனை ஐநா உணவு அமைப்பு ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு கூட 20000 மெட்ரிக் டன் 40,000 மெட்ரிக் டன் கோதுமையை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.