சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ChatGPT பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இது நாம் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் ஒன்றாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த ChatGPT வைத்து திருமணம் செய்து கொள்ள ஒரு ஜோடி முடிவெடுத்துள்ளது.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த ரீஸ் வீஞ்ச்-டெய்டன் ட்ரூட் ஜோடிக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வழக்கத்திற்கு மாறாக தேவாலயத்தில் வைத்து அருட் தந்தைக்கு பதில் ChatGPT உதவியுடன் இயங்கும் இயந்திரம் மூலம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வரவேற்புரையுடன் திருமணத்தை தொடங்கிய இயந்திரம் திருப்பலியுடன் திருமண விழாவை நிறைவு செய்து வைத்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.