
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பல்வேறு மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாயஸ்ரீ மற்றும் மகா ஸ்ரீ ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் அவர். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 475 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், இருவரும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.