திரைத்துறை மற்றும் பொதுவெளியில் நீண்டகாலமாக கவனத்தை ஈர்க்காமல் இருந்து வந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் குடியேறிய பெரும் தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகளான சங்கீதா திருமணத்திற்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996 ஆண்டு பூவே உனக்காக படத்தின் வெற்றிக்காக விஜய்யை நேரில் சந்தித்தபோது தொடங்கிய இவர்களது உறவு தற்போது சட்டப்போராட்டமாக மாறியுள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரைச் சொத்துகள் மற்றும் லண்டனில் உள்ள தொழில் முதலீடுகள் மூலம் சங்கீதா பொருளாதார ரீதியாகத் தனித்து விளங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள புகார்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விஜய் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாகவும் அது தமக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நடிகை உடனான அந்த உறவு குறித்த ஆதாரங்களைத் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாகத் திரைமறைவிலேயே இருந்து வந்த அவர் தற்போது இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
தற்போது லண்டனில் தனது தொழில்களைக் கவனித்து வரும் சங்கீதா தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி இந்தச் சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார். திருமணத்திற்குப் பின் ஒரு இல்லத்தரசியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட போதிலும் தனது குடும்பப் பின்னணி மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் காரணமாக அவர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களில் எழும் விவாதங்கள் சங்கீதாவின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.
