
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலா உடன் நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. பலரும் சமந்தாவுக்கு ஆதரவாகவும் நாக சைதன்யாவுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருக்கும் லிங்க பைரவி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நவராத்திரி பூஜையை முன்னிட்டு கோவிலில் வழிபாடு செய்த சமந்தா அது தொடர்பான போட்டோஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நான் உங்களது வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி தேவி. அனைவருக்கும் மகிழ்ச்சியான நவராத்திரி வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram