
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பல பட வாய்ப்புகள் குவியும் நிலையில் அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவர கொண்டாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அண்மையில் மாலத்தீவுக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றனர்.

ஆனால் தற்போது நடிகை ராஷ்மிகா விஜய் தேவர கொண்டாவை பிரேக் அப் செய்துவிட்டார் என்றும் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம கொண்டா ஸ்ரீனிவாஸைதான் காதலிக்கிறார் என்றும் கிசுகிசுக்கள் பரவுகிறது. அண்மையில் நடிகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஷ்மிகா சேர்ந்து விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், தற்போது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டுள்ளனர். நடிகை ராஷ்மிகாவுக்கு ஸ்ரீனிவாஸை மிகவும் பிடிக்குமாம். இதனால்தான் தற்போது அவருடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் தற்போது விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.