தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயர் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி போன்ற பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் தெரிவித்தார்.

சுபாஷ் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர்  மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பார்வதி நாயர் உட்பட 7 பேர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி சுபாஷ் அளித்த  புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பார்வதி நாயர்  ராஜேஷ், அருள் முருகன், இளங்கோவன் செந்தில், அஜித் பாஸ்கர் உட்பட 7 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.