
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடிகை ரம்யா என்கின்ற திவ்யா நடித்துள்ளார். இதில் கர்நாடகாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 42 வயதாகும் ரம்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவ்வபோது அவரின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இந்நிலையில் ரம்யாவின் காதலனின் புகைப்படம் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகின்றது என்றும் சில புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நடிகை ரம்யா தனது instagram பக்கத்தில் வைரல் புகைப்படத்தை பகிர்ந்து fake என குறிப்பிட்டு ஸ்டோரியும் வைத்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே நட்பு மட்டுமே உள்ளது எனவும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.