தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது “கஜானா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. அப்போது தயாரிப்பாளர் ராஜா “இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு யோகி பாபு ரூ. 7லட்சம் பணம் கேட்கிறார்” என்றும், “இவரெல்லாம் ஒரு நடிகராக இருக்கவே தகுதி இல்லை” என்றும் கூறினார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தயாரிப்பாளர் சொன்ன கருத்துக்கு அந்த படத்தின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். அதோடு யோகி பாபு பற்றி தயாரிப்பாளர் பேசியதற்கும், படக்குழுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் இதே போன்று யோகி பாபுவும் தன்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.