
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் தகவலை புதுப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதில் தங்கள் ஆதார் எண் 10 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் வைத்திருப்பவர்கள் இலவச சேவை பயன்படுத்தி இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்.
ஆதார் தகவல் புதுப்பிக்க செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 14 வரை கால அவகாசம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது . இதனை புதுப்பிக்க தவறினால் ஆதார் விவரம் காலாவதியாகி விடும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆதார் சேவை மையம் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த இலவச பதிவில் ஆதார் எண் பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய கைரேகை, கண் விழி, வசிப்பிட முகவரி, திருமணமானவர்கள் தங்களுடைய தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயர் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ள விரும்பினால் இந்த சேவை பயன்படுத்திக் கொள்ளலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மக்கள் தொகை விபரங்களை மறுபரிசீலினை செய்வதற்காக முகவரி சான்று மற்றும் அடையாள சான்று போன்றவை பதிவேற்றம் செய்ய பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆதார் எண் வைத்துள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தகவல்களை கட்டண அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.