இந்தியாவில் மக்கள் பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்க அஞ்சலக திட்டங்களை பயன்படுத்துகின்றனர். வங்கியை விட அதிக லாபத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. பொதுவாக இந்தியாவில் அஞ்சலகத் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி முதலீடு செய்வதற்கு உகந்ததாக உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட வட்டி விகிதமே இந்த ஆண்டும் தொடரும் என தெரிவித்திருந்தது.

அதன்படி தற்போது போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்யும் சிறு சேமிப்பு திட்டமான ரெக்கரிங் டெபாசிட் முறையில் இந்த ஆண்டு 6.7% வட்டி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் பெரும் தொகையை வட்டியுடன் பெறலாம்.

அதாவது இந்தத் திட்டத்தில் ரூபாய் 10 ஆயிரம் முதலீடு செய்தால் கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். ரெக்கரிங் டெபாசிட் முறையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ரூபாய் 100 தவணையில் முதலீட்டை தொடங்கலாம்.

அதிகபட்ச ரூபாய் வரைமுறை கிடையாது. இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கு கணக்கிடப்படும்.இந்த திட்டம்  5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்தில் முதிர்வு அடையலாம். ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் கடன் பெரும் வசதியும் உண்டு.