இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கி கழிப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோனா. 38 வயதான இந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கியே கழிக்கிறார். மேலும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இடியோபாடிக் ஹைபர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டேன் என்றும் அதன் காரணமாக மற்றவர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். பல மருத்துவர்களிடமிருந்தும் சிகிச்சை பெற்று தனது தூக்கத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் வெளியுலகை பார்க்க ஆசையுடன் உள்ளது எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.