
வடக்கு லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் உள்ளார். அங்குள்ள இவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிய வரவில்லை.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டின் ஒரு கதவு சேதமடைந்துள்ளது. ஜூலை மாதம் பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர், அப்போதிலிருந்து அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த விபத்து குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.