
Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வணிக பைக் டாக்சி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது என்றும் இதனை ஓட்டுனர் மீறினால் உரிமைத்தை மூன்று மாதங்களுக்கு இலக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பைக் டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும் பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.