
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில் அமைதியாக நடந்து செல்லும் பெண்ணை, அருகில் நின்ற சேவல் ஒன்று அவரை தாக்குகிறது. இதையடுத்து அந்தப் பெண் கோபத்தில் அந்த சேவலை காலால் எட்டி உதைத்து அதன் பின் தன் கைகளால் அதனை தாக்குகிறார்.
https://x.com/PahunSingh_/status/1930576539080413363?t=n99zDZH0t-7XFvjk9j8AtQ&s=08
இதனை அந்த சேவல் அமைதியாக வாங்கிக் கொள்கிறது. அதன் பின் சிறிது நேரத்தில் மீண்டும் அந்தப் பெண்ணை தாக்க முயற்சி செய்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த பெண் மீண்டும் தனது கைகளால் சேவலை சரமாரியாக தாக்குகிறார். அதன் பின் அந்த சேவலை பிடித்து தூக்கி வீசுகிறார். பின்னர் சிறிய கம்பால் அதனை தாக்குகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.