சில நபர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆபத்தான நிலை உண்டாகும். அதுபோல சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு நீண்ட நேரம் தெளியாத நிலை ஏற்படும். எனவே திடீரென மயக்கம் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூறும் விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உடலுறுப்புகள் சிறப்பாக செயல்பட அதற்கான முக்கிய வேலைகளை இதயம் செய்கிறது. எனவே இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது ரத்த அழுத்தம் அல்லது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது திடீரென மயக்கம் ஏற்படும்.

அதேபோல மது அருந்துதல், போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது மயக்கம் வருவதற்கான சூழல்களை ஏற்படுத்தும். மயக்கத்தில் உள்ள சிலரின் இமைகளை திறந்து பார்த்தால் அவை சுழன்று கொண்டே இருக்கும். எனவே மயக்கம் தெளிந்த பிறகு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. அச்சம், பதற்றம் போன்ற உணர்வுகளும் உளவியல் ரீதியான காரணங்களும் மயக்கத்தினை ஏற்படுத்தும். ஆகையால் மயக்கத்தை தவிர்க்க தியானம் மற்றும் யோகா செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.