
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி வகையான கின்மேமை, ஜப்பான் நாட்டின் டோயோ நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி அதன் தனித்துவமான தரத்திற்காக மற்றும் உயர்ந்த ஊட்டச்சத்துகளுக்காக பெரும் புகழ்பெற்றது. முக்கியமாக, இந்த அரிசியை சமைப்பதற்கு முன்பு கழுவ வேண்டிய அவசியம் இல்லை என்பதும், இது 1.8 மடங்கு அதிகமான ஃபைபர் மற்றும் ஏழு மடங்கு அதிகமான வைட்டமின் B1 சத்து கொண்டது என்பதும் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
கின்மேமை அரிசி, ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் உணவுப் பிரியர்களின் விருப்பமாக திகழ்கிறது. இதன் உயர்ந்த ஊட்டச்சத்துக்கள், உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்களை ஈர்க்கின்றன. அந்தவகையில், இவ்வரிசி சுத்தம், சுவை, ஆரோக்கியம் ஆகியவற்றின் சிறந்த கலவையாக மாறியுள்ளது. இந்த அரிசியின் விலைசுமா கிடையாது. ஒரு கிலோ கின்மேமை அரிசியின் விலை சுமார் ரூ.15,000 வரை செல்கிறது. அதனாலேயே உலகின் மிக விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது.