
மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல் நாய் திடீரென தாக்குதல் நடத்தியது. அதில் நபரின் கை முழுவதும் நாயின் வாய்க்குள் சிக்கி, கொடூரமாக கடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் முயற்சித்தும், அந்த நாய் கையை விடாமல் இறுக்கமாக பிடித்திருந்தது. அருகில் இருந்தவர்கள், இரும்புக் கம்பி கொண்டு நாயை அடித்தும், தண்ணீர் ஊற்றியும், நாய் விடாமல் பிடித்திருந்தது.
இந்தக் காட்சிகள் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரண்டாவது வீடியோவில், பாதிக்கப்பட்ட நபர் கை முழுவதும் காயம் மற்றும் ரத்தம் சிந்திய நிலையில், ஒரு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
#WATCH | Pitbull Mauls Pune Man As He Cries For Help With Hand Trapped In Dog’s Jaws#Pune #Maharashtra #punenews #pitbull pic.twitter.com/G4xThj7S1Q
— Free Press Journal (@fpjindia) July 3, 2025
இந்நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, “ஒரு நபர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றபோது, பிட்புல் நாய் திடீரென தாக்கியது. அந்த நபரை காப்பாற்றுவதற்காக பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் அதிவேகமாக நடவடிக்கை எடுத்தது, பெரிய விபத்து ஒன்றை தவிர்க்க வைத்திருக்கலாம்” என்றனர்.
இந்த சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் இந்திய அரசு பயங்கர நாய்களின் தாக்குதல்கள், குறிப்பாக மூப்பியோரும் குழந்தைகளும் குறிவைக்கப்படுகிற சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, 23 வகையான ‘அதிரடியான நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தைத் தடைசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியலில் பிட்ட்புல், ராட்வெய்லர், டெரியர், வுல்ஃப் டாக், ரஷ்யன் ஷெப்பர்ட், மற்றும் மாஸ்டிஃப் இன நாய்கள் அடங்குகின்றன. மத்திய அரசு இதற்கான தடையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என விலங்கு Husbandry மற்றும் பால் உற்பத்தித்துறை சார்பில் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த தடை நிலவுகின்ற போதிலும், இத்தகைய அதிக ஆபத்தான நாய்களை கட்டுப்பாடின்றி வளர்த்து, பொது மக்களுக்கு உயிர்ச் சிக்கலை ஏற்படுத்துவோர் மீது, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிட்புல் நாய்கள் உள்ளிட்ட பயங்கர இனங்கள் பொதுமக்கள் நடமாட்ட பகுதிகளில் சுற்றிவந்து தாக்குதல் நடத்தும் நிலை, மனித உயிருக்கு நேரடியாக அச்சுறுத்தலாக உள்ளதெனவே, கடுமையான நடைமுறைகள் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.